ராஜ்குமார் பெரியசாமி எழுத்து மற்றும் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘வீழா வீரா’ இன்று வெளியாகியுள்ளது.
இப்படத்தில் தனுஷுடன் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் மற்றும் நசீருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அபியங்கர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இவரது இசையில் வெளியான படத்தின் முதல் பாடலான ‘அலாக்கா லோவா’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ‘வீழா வீரா’ பாடலும் வெளியாகியுள்ளது.
தள்ளிப்போன ‘ஓம்’ படத்தின் ரிலீஸ்
‘ஓம்’ திரைப்படம் முதலில் அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே காலகட்டத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியாவதால், நேரடி மோதலைத் தவிர்க்கும் வகையில் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
மேலும், தீபாவளியை முன்னிட்டு சூர்யா நடிப்பில் வெளியாகவிருந்த ‘சீன்’ திரைப்படத்திற்கும் வழிவிடும் வகையில் ‘ஓம்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ‘ஓம்’ திரைப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.