பக்கத்து வீட்டுக்காரரின் பாலியல் சேட்டை.. உடன்படாத பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே, வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி 32 வயது ரோஜா. நூறுநாள் வேலைத்திட்டத்தில் ரோஜா வேலைக்கு சென்று வந்துள்ளார். திங்கட்கிழமை காலை வேலைக்கு வரவேண்டியவரை காணாததால், அக்கம்பக்கத்தினர் தேடி வந்தபோது ரோஜாவின் அலறல் சத்தம் கேட்டு மிரண்டு போயிருக்கிறார்கள்.
அங்கே ரோஜாவின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ், ரோஜாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு ரத்தம் சொட்டச் சொட்ட அவரது சடலத்தை இழுத்துச் சென்றுள்ளார்.
இதனைப் பார்த்த அப்பகுதியினர், ஆரோக்கியதாஸைப் பிடித்து தர்ம அடி கொடுத்து அங்கிருந்த கம்பத்தில் கட்டிப் போட்டுள்ளனர்.
பின்னர் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், வாட்டாத்தி கோட்டை போலீசாரும் ஒரத்தநாடு ஏ.எஸ்.பி. ஷஹ்னாஸ் இலியாஸ் உள்ளிட்டோரும் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் உயிரிழந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஆரோக்கியதாஸின் மனைவி வெளிநாட்டில் வேலை செய்துவருவதால் அவர் தனியாக வசித்து வந்துள்ளார். 2 மாதங்களுக்கு முன்பாக, ரோஜாவும், அவரது கணவரும் வீட்டில் தனிமையில் இருந்தபோது, ஆரோக்கியதாஸ் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்ததாகக் கூறி அவர்களிடையே தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.
ரோஜா தன் கணவருடன் உல்லாசமாக இருந்ததைப் பார்த்தது முதல், ஆரோக்கியதாஸுக்கும் அவர் மீது தீராத மோகம் இருந்துள்ளது. மனைவி வெளிநாட்டில் இருப்பதால், தனது தனிமையைத் ரோஜாவிடம் தீர்த்துக் கொள்ளும் நோக்கத்தில் இருந்துள்ளார் ஆரோக்கியசாமி. திங்கட்கிழமை காலை ஆரோக்கியதாஸின் வீட்டருகே சந்துப்பகுதியில் ரோஜா வந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த ஆரோக்கியதாஸ், ரோஜாவிடம் அத்துமீறி உள்ளார். அவரது மேலாடையையும் கிழித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரோஜா சத்தமிடவே, தான் கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்டிக் கொன்றதாக விசாரணையில் கூறியதாக, போலீசார் தெரிவித்துள்ளனர். பக்கத்துவீட்டுக்காரரின் மோகத்துக்கு உடன்படாததால் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?