மீண்டும்.. மீண்டுமா..? உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Dec 16, 2024 - 13:36
 0
மீண்டும்.. மீண்டுமா..? உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. கனமழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது

தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை.

இந்நிலையில், இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த இரு தினங்களில் மேலும் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 17:  தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
சென்னை, செங்கல்பட்டு,  விழுப்புரம், கடலூர்,  மயிலாடுதுறை,  திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 18: சென்னை,  செங்கல்பட்டு,  திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 19: வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய,  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 20: வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய,  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

டிசம்பர் 21 மற்றும் 22-ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

தென்தமிழக  கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய  குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow