TVK Maanadu: தவெக மாநாட்டுக்குச் சென்றுவிட்டு திரும்பிய வேன் விபத்து... 30க்கும் மேற்பட்டோர் காயம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிய போது இந்த விபத்து நடந்துள்ளதாக தகவல்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கோவில்பட்டியைச் சேர்ந்த சிலர், விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பியுள்ளனர். அப்போது சாத்தூர் அருகே வேனின் டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?