இந்திய அணிக்கு 95 ரன்கள் டார்கெட்

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையே 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 95 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Oct 1, 2024 - 19:00
 0

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையே 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 285 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 233 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. தொடர்ந்து 2வது இன்னிங்ஸையும் வங்கதேச அணியே தொடங்கிய நிலையில் 146 ரன்களுக்கு அந்த அணியை இந்திய அணி வீரர்கள் சுருட்டினர். இதன்மூலம் இந்திய அணிக்கு 95 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow