பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டு தலைவர் ஒருவரை அமெரிக்க அதிபர் நேரடியாக விமான தளத்திற்கு சென்று வரவேற்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
வானில் பறந்த ராணுவ விமானங்கள் :
வரவேற்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விமானப்படையின் சக்திவாய்ந்த B-1 ரக போர் விமானங்கள் விமான தளத்தின் மேலே பறந்து சென்றன. இந்த ராணுவ மரியாதை நிகழ்வின்போது, விமானங்கள் எழுப்பிய அதிகப்படியான சத்தம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
அப்போது டிரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் இருவரும் விமான தளத்தில் அருகருகே நின்றிருந்தனர். விமானங்கள் தலைக்கு மேலே பறந்தபோது, அந்த பெரும் சத்தத்தால் டிரம்ப் சில நொடிகள் முகம் சுளித்தது கேமராவில் பதிவானது.
ஜி ஜின்பிங் அமைதியாக இருந்த தருணம் :
விமானங்கள் பறந்தபோது டிரம்பின் முகபாவனை சமூக வலைதளங்களில் பேசுபொருளான நிலையில், அவருக்கு அருகில் நின்றிருந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் எந்தவித வெளிப்படையான எதிர்வினையும் காட்டாமல் அமைதியாக இருந்தார்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சிவப்பு கம்பள வரவேற்பு, 21 பேர் கொண்ட மரியாதை அணிவகுப்பு, அமெரிக்கா மற்றும் சீன கொடிகளை ஏந்திய குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இரு நாடுகளின் தேசிய கீதம், ராணுவ மரியாதை :
அமெரிக்க விமானப்படை இசைக்குழு சிறப்பு இசை நிகழ்ச்சியை வழங்கியதுடன், இரு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. அமெரிக்க ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த வீரர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
வர்த்தகம் முதல் புவிசார் அரசியல் வரை முக்கிய பேச்சுவார்த்தைகள் :
ஜி ஜின்பிங்கின் அமெரிக்க பயணத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள், இறக்குமதி வரி விவகாரம், தொழில்நுட்ப வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு (AI), ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தைவான் விவகாரம், ஈரான் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களும் இந்த சந்திப்பில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
டிரம்ப் - ஜி ஜின்பிங் சந்திப்பு உலக நாடுகளின் கவனம் :
உலகின் இரு பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் நேரடியாக சந்திக்கும் இந்த நிகழ்வு, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பில் எடுக்கப்படும் முடிவுகள், உலகளாவிய வர்த்தகம் மற்றும் அரசியல் நிலவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Holy sh*t pic.twitter.com/XtkL1RbMkk
— Republicans against Trump (@RpsAgainstTrump) September 23, 2026