தமிழ்நாடு

Gold Rate: சடாரென சரிந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஹேப்பி!

By Christon
09 Sep 2026, 11:06 AM
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் குறைந்துள்ளது.
உலகளாவிய சூழலில் நிலவும் போர்ப் பதற்றங்கள் காரணமாகப் பல்வேறு நாடுகள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாகத் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமை அன்று சவரனுக்கு ரூ. 480 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,040-க்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து நேற்று சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 1,14,260 என்ற விலையை எட்டியது.

தங்கம் விலை

இந்நிலையில், சென்னையில் இன்று (செப். 9) ஆபரணத் தங்கத்தின் விலை சரிவைக் கண்டுள்ளது. கிராமுக்கு ரூ. 125 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 14,145-க்கும், சவரனுக்கு ரூ. 1,000 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 1,13,260-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய நிலையிலேயே நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 255-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,55,000-க்கும் விற்பனையாகி வருகிறது.