கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று சற்றே சரிவைக் கண்டுள்ளது நகைப்பிரியர்களுக்குச் சற்று ஆறுதலை அளித்துள்ளது.
சென்னையில் கடந்த இரு தினங்களாகத் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.2,320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,13,920-க்கும், ஒரு கிராம் ரூ.14,240-க்கும் விற்பனையானது. அதனைத் தொடர்ந்து நேற்றும் விலையேற்றம் நீடித்து, சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,880-க்கும், கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தொடர் உயர்விற்குப் பிறகு இன்று தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 வரை சரிந்து, ஒரு சவரன் ரூ.1,13,520-க்கு விற்பனையாகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.170 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,190 என்ற விலைக்கு வந்துள்ளது.
தங்கத்தின் விலை இன்று சரிவைக் கண்டுள்ள போதிலும், வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000-க்கும் நேற்றைய விலையிலேயே தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.