தமிழ்நாடு

தங்கம் விலை கிடுகிடு உயர்வு...! சவரனுக்கு ரூ.1,160 அதிரடி ஏற்றம்!

By Sumalekha
18 Sep 2026, 10:32 AM
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு ஷாக்... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்த இன்றைய விலை நிலவரம்!
சென்னையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதேபோல் வெள்ளி விலையிலும் உயர்வு பதிவாகியுள்ளது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை மாற்றம் : 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக மாறுபட்டு வந்தது. கடந்த 12-ம் தேதி சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,360-க்கும், ஒரு கிராம் ரூ.14,170-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

13-ம் தேதியும் இதே விலையில் தங்கம் விற்பனையான நிலையில், 14-ம் தேதி விலையில் சரிவு ஏற்பட்டது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.1,13,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,125-க்கும் விற்பனையானது.

அதனைத் தொடர்ந்து 15-ம் தேதி தங்கம் விலை மேலும் குறைந்து, சவரனுக்கு ரூ.680 சரிந்து ரூ.1,12,320-க்கும், ஒரு கிராம் ரூ.14,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 16-ம் தேதி சற்று உயர்ந்து சவரன் ரூ.1,12,520-க்கும், கிராம் ரூ.14,065-க்கும் விற்பனையானது.

நேற்று மீண்டும் தங்கம் விலை குறைந்து, சவரன் ரூ.1,12,080-க்கும், ஒரு கிராம் ரூ.14,010-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று தங்கம் விலை நிலவரம் :

இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

ஒரு சவரன் தங்கம் ரூ.1,160 அதிகரித்து ரூ.1,13,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.145 உயர்ந்து ரூ.14,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு நகை வாங்க காத்திருக்கும் பொதுமக்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலையிலும் உயர்வு :

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையிலும் இன்று ஏற்றம் பதிவாகியுள்ளது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 உயர்ந்து ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,55,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சர்வதேச சந்தை நிலவரம், டாலர் மதிப்பு, முதலீட்டாளர்களின் ஆர்வம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தினசரி மாறுபட்டு வருகின்றன.