தமிழ்நாடு

நகை வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

By Sumalekha
23 Sep 2026, 12:15 PM
இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 23) மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.50 குறைந்து ரூ.14,135-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை

இதனிடையே, வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.