தமிழ்நாடு

சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அலர்ட் !

By Sumalekha
25 Sep 2026, 06:54 AM
சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ள நிலையில், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் சில பகுதிகளில் மட்டும் மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவியது.

இன்று (25-09-2026) தமிழ்நாட்டில் மழை நிலவரம் :

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனைத் தவிர தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை நிலவரம் :

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.

பெரும்பாலான பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை இயல்பான அளவிலேயே நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான வெப்பநிலையை ஒட்டியே வானிலை காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு :

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை :

தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் இன்று (25-09-2026) வட தமிழ்நாடு கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.

கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்றும், இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.