தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக திகழும் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்குமார். இருவருக்கும் தனித்தனி ரசிகர் பட்டாளம் இருந்தாலும், ஒருவருக்கொருவர் காட்டும் மரியாதையும் நட்பும் எப்போதும் கவனம் ஈர்த்து வருகிறது.
இந்த நிலையில், சர்வதேச கார் பந்தய களமான பிரிட்டனின் சில்வர்ஸ்டோனில் விஜய் - அஜித் சந்தித்துக் கொண்ட சம்பவம் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அஜித்குமார் பங்கேற்கும் மிஷெலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தய போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகருமான விஜய், போட்டியை தொடங்கி வைக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.
அஜித்தின் ரேஸை தொடங்கி வைக்கும் விஜய்
மிஷெலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயம் பிரிட்டனின் சில்வர்ஸ்டோனில் நடைபெறுகிறது. இதில் அஜித்குமார் தனது அணியுடன் இணைந்து பங்கேற்கிறார்.
இந்த போட்டியை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். போட்டி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட தகவலில், இந்திய வீரர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
44 கார்கள் பங்கேற்கும் இந்த சர்வதேச போட்டியில் அஜித்குமார் களமிறங்குவது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில்வர்ஸ்டோனில் சந்தித்த தல - தளபதி
இந்த நிலையில், போட்டி நடைபெறும் சில்வர்ஸ்டோன் தளத்தில் விஜய் மற்றும் அஜித்குமார் நேரில் சந்தித்துக் கொண்டனர். அப்போது அஜித்தை பார்த்த விஜய் உற்சாகமாக அவரை நோக்கி க்யூட்டாக ஓடி சென்று அன்புடன் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.
தல - தளபதியை ஒன்றாக கண்ட ரசிகர்கள் உற்சாகம்
பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் விஜய் - அஜித் இருவரையும் ஒரே காட்சியில் பார்த்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
இருவரும் சந்தித்துக் கொண்ட போது, அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒருவருக்கொருவர் முத்தங்களை பரிமாறிக் கொண்டனர். பின்னர் இருவரும் இணைந்து ரசிகர்களை நோக்கி கையசைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
மறக்க முடியாத தருணம் என ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய் - அஜித் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் இதனை ஒரு சிறப்பு தருணமாக கொண்டாடி வருகின்றனர்.
"தலை - தளபதி ஒரே இடத்தில்", "இது தமிழ் சினிமாவின் மறக்க முடியாத தருணம்" என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற இந்த சந்திப்பு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை தாண்டி அன்பும் நட்பும் நிறைந்த தருணமாக அமைந்துள்ளது.