இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், ஐந்து முனைப் போட்டியாக வேகமெடுத்திருக்கிறது. ஆனாலும், அந்த தொகுதிகளில் வெற்றி, தோல்விகளை தீர்மானிக்கும் மாம்பழத்தின் வாசம், எந்தப் பக்கம் வீசும் என்பதை பா.ம.க. தலைமை அறிவிக்காமல் சஸ்பென்ஸ் வைத்திருப்பதும், அடுத்தடுத்த நாட்களில் அக்கட்சி யார் பக்கம் சாயும் என்பதும்தான் தமிழகத்தை குடையும் ஆயிரம் வோல்டேஜ் அரசியல் ட்விஸ்ட்!
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி கணக்குகள் எல்லாம் மாறிவிட்ட நிலையில், பெருவாரியான கட்சிகள் அவை சார்ந்த கூட்டணியின் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துவிட்டன. (இடதுசாரிகள் தனித்து போட்டியிடுவது தனிக்கதை.) ஆனால், அதிமுகவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் பா.ம.க. இதுவரை யாருக்கு தங்கள் ஆதரவு?" என அறிவிக்கவில்லை.
இது எடப்பாடிக்கு கலக்கம் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது தொடர்பான உள்விவகாரங்கள் அறிந்த பாமக மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம் "தே.ஜ.கூட்டணியில் பாமக ஆதரவோடு அதிமுக எம்.எல்.ஏ.க்களாக வெற்றிபெற்ற மதுராந்தகம் மரகதம் தாராபுரம் சத்தியபாமா உள்ளிட்ட நான்கு எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யவைத்து, அவர்களை தவெக தங்கள் பக்கம் வளைத்துப் போட்டதை அன்புமணி கொஞ்சமும் ரசிக்கவில்லை.
அந்த நான்கு இடங்களில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தி தவெகவை தோற்கடிப்போம்' என்றளவுக்கு சீறினார் அன்புமணி. ஏனெனில், மேற்கண்ட மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகள் பா.ம.க. வாக்குவங்கி கணிசமாக உள்ள இடங்கள். குறிப்பாக 2016ல் 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று பாமக தனித்து களமாடியபோதே வட தமிழகத்திலுள்ள மதுராந்தகத்தில் 16,215 வாக்குகளை (9 %) பெற்றது. அங்கு கடந்த 2026 தேர்தலில் வெற்றி வித்தியாசமே சுமார் ஏழாயிரம் வாக்குகள்தான்.
அதேபோல, 2001ல் தாராபுரத்தில் பா.ம.கவுக்கு சிவகாமி என்ற எம்.எல்.ஏ.வே இருந்திருக்கிறார். தவிர, 2006ல் தி.மு.க, 2026ல் அதிமுக அங்கு வென்றபோதும் பா.ம.க. அக்கட்சிகளின் கூட்டணியில் இருந்திருக்கிறது. ஆக இவ்விரு தொகுதிகளில் எந்த கட்சி வெல்லவேண்டும் என்றாலும் பாமக ஆதரவு அவசியம் தேவை. அதிலும், மதுராந்தகம் தொகுதியில் பா.ம.க தவிர்க்க முடியாத சக்தி.
இதுவரை அதிமுக தலைமை வகிக்கும் தே.ஜ.கூட்டணியில்தான் பாமக நீடிக்கிறது என்று சொல்லிக்கொண்டாலும் 'இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்குதான் ஆதரவு என்பதை அன்புமணி இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதிமுக பாமக புள்ளிகளின் சந்திப்பும் நடக்கவில்லை.
சமீபத்தில் ரிலாக்ஸ் செய்வதற்காக நெருங்கிய நண்பருடன் ஐக்கிய அரபு நாடுகளுக்கு 10 நாட்கள் டூர் சென்றிருந்தார் அன்புமணி அச்சமயத்தில்தான் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், செப்டம்பர் 14ம் தேதி தமிழகம் திரும்பிய அன்புமணியை சந்தித்து ஆதரவு கேட்க அதிமுக மட்டுமின்றி, தி.மு.க, தவெக தரப்புகளும் முயற்சி செய்துவருகின்றன.
செப்டம்பர் 17 அன்று வன்னியர் இடஒதுக்கீடு போராட்ட தியாகிகள் நினைவு தினம் வருவதால், அதற்கான பணிகளில் பிஸியாக இருப்பதாக சொல்லி சந்திப்புகளை தள்ளிப்போட்டு வரும் அன்புமணி, யாருக்கு ஆதரவளிக்கலாம் என பலமுனை யோசனையில் மூழ்கியிருக்கிறார். இதன் பின்னணியில் பல காரணங்கள் இருக்கின்றன...
குறிப்பாக, தே.ஜ.கூட்டணி தோல்விக்கு எடப்பாடியின் பிடிவாதமும் ஒரு காரணம் என்று கருதி, அவர்மீது மனவருத்தத்தில்தான் இருக்கிறார் அன்புமணி அதாவது, 2026 தேர்தலின்போது திருமாவளவனை ஒன்றுமில்லாமல் ஆக்கவேண்டும் என்ற மறைமுக உள்நோக்கத்துடனும் பட்டியல் சமூக வாக்குகளை தேஜகூட்டணிக்கு மடைமாற்றம் செய்யவேண்டும் என்ற கணக்குடனும் கிருஷ்ணசாமி ஜொன்மூர்த்தி, ஜான் பாண்டியன் ஆகியோருக்கு கூட்டணியில் கணிசமான சீட் கொடுத்து ஒருங்கிணைக்க வேண்டும் என்றார் அன்புமணி ஆனால், 'ஒரு சீட் தான் என எடப்பாடி கெடுபிடி காட்டியதால், கிருஷ்ணசாமி கூட்டணிக்கே வரவில்லை. மற்ற இருவரும் வேண்டாவெறுப்பாகத்தான் கூட்டணியில் இருந்தனர்.
தேர்தலுக்குப் பிறகு, ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன் ஆகியோர் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டனர். இதைக்கூட எடப்பாடியால் தடுக்க முடியவில்லை. அந்த கூட்டணியில் பயணித்தால் என்னாவது என்பதுதான்
அ.தி.மு.க.வைவிட்டு உடனடியாக பிரிந்தால் அவப்பெயரை சந்திக்க வேண்டிவரும். மேலும், இடைத்தேர்தல் ஆதரவுக்கான ஆதாயக் கணக்குகளும் இருக்கின்றன. எனவே செப்டம்பர் 17ம் தேதி நடக்கவிருக்கும் பாமக பொதுக்கூட்டத்தை தொடர்ந்து கேபி.முனுசாமி தலைமையிலான அதிமுக டீமுடன் அன்புமணி பேசவிருக்கிறார். அதில் எட்டப்படும் உடன்பாட்டைப் பொறுத்துதான் பாமகவின் நிலைப்பாடு இருக்கும்.
ஏனெனில் விசிக தங்களது கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டதால், பாமகவை கூட்டணிக்குள். கொண்டுவர நினைக்கிறது திமுக ஜெகத்ரட்சகன், துரைமுருகன், எம்.ஆர்.கே. உள்ளிட்டோர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளித்தால் அதற்காக பேசிவருகிறார்கள். குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தலில் அதிக ரீட் உள்ளிட்ட ஆஃபர்களை அள்ளி வீசியிருக்கிறார்கள்.
அதே உள்ளாட்சி சீட், அமைச்சர் பதவி ஆகிய ஆஃபர்களோடு தவெகவும் பாமகவை அப்ரோச் செய்கிறது. ஆனால், வி.சி.க. அங்கிருப்பதால் கடும் தயக்கம் காட்டுகிறார் அன்புமணி எனவே, அதிமுக புள்ளிகளின் சந்திப்புக்குப் பிறகு உயர்மட்டக் சிவக்குமார் இதன் பின்னணியில் பல காரணங்கள் இருக்கின்றன... குறிப்பாக, தே.ஜ.கூட்டணி தோல்விக்கு எடப்பாடியின் பிடிவாதமும் ஒரு காரணம் என்று கருதி, அவர்மீது மனவருத்தத்தில்தான் இருக்கிறார் அன்புமணி.
அதாவது. 2026 தேர்தலின்போது திருமாவளவனை ஒன்றுமில்லாமல் ஆக்கவேண்டும் என்ற மறைமுக உள்நோக்கத்துடனும் பட்டியல் சமூக வாக்குகளை தே.ஜ.கூட்டணிக்கு மடைமாற்றம் செய்யவேண்டும் என்ற கணக்குடனும் கிருஷ்ணசாமி, ஜெகன்மூர்த்தி, ஜான் பாண்டியன் ஆகியோருக்கு கூட்டணியில் கணிசமான சீட் கொடுத்து ஒருங்கிணைக்க வேண்டும் என்றார் அன்புமணி. ஆனால், 'ஒரு சீட் தான்' என எடப்பாடி கெடுபிடி காட்டியதால், கிருஷ்ணசாமி கூட்டணிக்கே வரவில்லை. மற்ற இருவரும் வேண்டாவெறுப்பாகத்தான் கூட்டணியில் இருந்தனர்.
தேர்தலுக்குப் பிறகு, ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன் ஆகியோர் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டனர். இதைக்கூட எடப்பாடியால் தடுக்க முடியவில்லை. அந்த கூட்டணியில் பயணித்தால் நம் எதிர்காலம் என்னாவது என்பதுதான் அன்புமணியின் யோசனை. அதேசமயம், ராஜ்யசபா சீட் கொடுத்த அ.தி.மு.க.வைவிட்டு உடனடியாக பிரிந்தால் அவப்பெயரை சந்திக்க வேண்டிவரும்.
மேலும், இடைத்தேர்தல் ஆதரவுக்கான ஆதாயக் கணக்குகளும் இருக்கின்றன. எனவே, செப்டம்பர் 17ம் தேதி நடக்கவிருக்கும் பாமக பொதுக்கூட்டத்தை தொடர்ந்து கே.பி.முனுசாமி தலைமையிலான அதிமு.க டீமுடன் அன்புமணி பேசவிருக்கிறார். அதில் உடன்பாட்டைப் பொறுத்துதான் பா.ம.க.வின் நிலைப்பாடு இருக்கும்.
ஏனெனில், விசிக தங்களது கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டதால், பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவர நினைக்கிறது திமுக ஜெகத்ரட்சகன், துரைமுருகன், எம்.ஆர்.கே உள்ளிட்டோர் அதற்காக பேசிவருகிறார்கள். குறிப்பாக, இடைத்தேர்தலில் தி.மு.கவுக்கு ஆதரவளித்தால் உள்ளாட்சித் தேர்தலில் அதிக சீட் உள்ளிட்ட ஆஃபர்களை அள்ளி வீசியிருக்கிறார்கள்.
அதே உள்ளாட்சி சீட், அமைச்சர் பதவி ஆகிய ஆஃபர்களோடு தவெ.கவும் பாமகவை அப்ரோச் செய்கிறது. ஆனால், வி.சி.க. அங்கிருப்பதால் கடும் தயக்கம் காட்டுகிறார் அன்புமணி. எனவே, அதிமுக புள்ளிகளின் சந்திப்புக்குப் பிறகு உயர்மட்டக் அன்புமணி, ஒருவேளை தி.மு.கவுக்கு ஆதரவு என்று நிலைப்பாட்டை அறிவித்தால், 'எம்.பி. சீட் கொடுத்தார்கள் என்பதற்காக அ.தி.மு.க.வுடன் தொடர வேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லை.
காங்கிரஸ், மதிமுக கூடத்தான் தி.மு.க. தயவில் எம்.பிக்களை பெற்றுக்கொண்டு தவெக கூட்டணிக்கு தாவினார்கள். அதைவிடவா இது தவறு என்ற தடுப்பு மருந்தும் பாமகவிடம் தயாராக இருக்கிறது.
இந்த சூழலில் செப் 16ம் தேதியன்று நிருபர்களை சந்தித்த அன்புமணி இடைத்தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிடாது. யாருக்கு ஆதரவு என்பதை விரைவில் அறிவிப்போம்' என சொல்லியிருப்பது ஒருவகையில் மேற்கண்ட விவரங்களை உறுதிப்படுத்துகிறது.” என்றார் விரிவாக.
இதுகுறித்து பாமக எம்.எல்.ஏ. சிவகுமாரிடம் கேட்டோம். "பா.ம.க. ஆதரவுள்ள கட்சிதான் இடைத்தேர்தலில் ஜெயிக்கும். இதுவரை தே.ஜ.கூட்டணியில்தான் இருக்கிறோம். ஆதரவு நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கிறதா, இல்லையா என்பதை தலைவர்தான் முடிவுசெய்வார்" என்றார் சுருக்கமாக.
மாம்பழத்திற்கு திடீர் டிமாண்ட்!