AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் 1980-களின் காலகட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை 80s Vibe என்று பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஒருபக்கம், “AI தந்த 80s Vibe” என நெட்டிசன்கள் தங்களுக்கு பிடித்த காட்சிகளையும், பிரபலங்களையும் 80s காலத்துக்கு கொண்டு சென்று பதிவிட்டு வருகின்றனர். மறுபக்கம், “80s-ல் நாங்கள் இப்படித்தான் இருந்தோம்... இதோ ஒரிஜினல்!” என பழைய புகைப்படங்களைப் பகிர்ந்து, AI படங்களுக்கு டஃப் கொடுத்து வருகின்றனர்.
இந்த டிரெண்ட் சினிமா, விளையாட்டு, தொழில்துறை என பல்வேறு துறைகளையும் தாண்டி அரசியல் களத்திற்கும் சென்றுவிட்டது. அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளும் தங்களது பழைய புகைப்படங்கள், 80s கால அரசியல் காட்சிகளை நினைவுபடுத்தும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ‘80s Vibe’ தற்போது அரசியல் மோதலுக்கும் பிள்ளையார் சுழி போட்டுள்ளது. காங்கிரஸ் கேரளா தரப்பில் பகிரப்பட்ட ஒரு AI புகைப்படத்தில், 1980-களின் குஜராத் தெருவில் ஒரு வேனில் ஒருவர் அமர்ந்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதே பின்னணியில் பாஜக தரப்பில் ராஜிவ் காந்தி வேனில் அமர்ந்திருப்பது போன்று மற்றொரு புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது.
A Delhi Street in the 80s. https://t.co/iUVvGHTO7o pic.twitter.com/eYclg2JLUW
— BJP Gujarat (@BJP4Gujarat) September 10, 2026
அதுமட்டுமல்லாமல், தெலங்கானா காங்கிரஸ், பிரதமர் மோடி பிக்பாக்கெட் அடிப்பது போன்ற காட்சியை பதிவிட்ட நிலையில், சோனியா காந்தியை இழிவுப்படுத்தும் விதமாக ஆபாசமாக பதிவிட்டுள்ளது குஜராத் பாஜக.
कांग्रेसियों सुनलो,
— BJP Gujarat (@BJP4Gujarat) September 10, 2026
AI से कार्टून बना सकते हो लेकिन कार्टून को कभी भी प्रधानमंत्री नहीं बना पाओगे
चोरी और डकैती कांग्रेस के DNA में है
• प्रधानमंत्री पद की चोरी
• 'गांधी’ सरनेम की चोरी
• जनता के हक़ के पैसों की चोरी
यह पढ़कर जिनको जलन होगी, उनके मनोरंजन के लिए एक तस्वीर भी… https://t.co/xDw9dxzcHV pic.twitter.com/05D0QAPA67
இதனால், வழக்கமான நாஸ்டால்ஜியா டிரெண்டாக தொடங்கிய ‘80s Vibe’, தற்போது அரசியல் விமர்சனம், கிண்டல், பதிலடி என புதிய பரிமாணத்தை எடுத்துள்ளது.
AI உருவாக்கும் கற்பனை 80s காட்சிகள் ஒருபுறம்... உண்மையான 80s புகைப்படங்கள் மறுபுறம்... என சமூக வலைதளங்களில் நடைபெறும் இந்த ‘Vibe War’ எங்கு போய் முடியப்போகிறது என்பதுதான் இப்போது நெட்டிசன்களின் கேள்வி!