எல்.ஐ.சி.யின் 70-வது ஆண்டு விழாவை முன்னிட்டு எல்.ஐ.சி.யின் முதன்மை செயல் அதிகாரி & மேலாண்மை இயக்குனர் திரு.ஆர்.துரைஸ்வாமி அவர்கள் எல்.ஐ.சி.யின் பீமா பிளாட்டினம் மற்றும் எல்.ஐ.சி.யின் ஜீவன் ரக்க்ஷா என்ற இரண்டு பாலிசிகளை அறிமுகப்படுத்தினார். அவற்றின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
எல்.ஐ.சி.யின் பீமா பிளாட்டினம் :
இது காப்பீடு மற்றும் சேமிப்பு இரண்டையும் வழங்கும் இலாபப் பங்களிப்பற்ற, பங்குச்சந்தை சாராத திட்டமாகும். இது ஒரு வரையறுக்கப்பட்ட பிரிமியம் திட்டமாகும். பிரீமியம் செலுத்தும் காலத்தில் செலுத்தப்பட்ட ஒவ்வொரு ரூ. 1000/- ஆண்டு பிரீமியத்திற்கு ரூ.70/-உத்திரவாத கூடுதல் தொகையாக வரவு வைக்கப்படும்.
(பிரிமியம் செலுத்தும் காலம் + 5)-வது ஆண்டில் பாலிசிதாரருக்கு அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 70% பூஸ்டர் வருவாய் பலனாக வழங்கப்படும்.
பே அவுட் காலத்தில் (பாலிசிகாலம் மைனஸ் பாலிசி செலுத்தும் காலம்) ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் அடிப்படைக் காப்பீட்டுத் தொகையில் 10% சீரான வருவாய் பலனாக வழங்கப்படும்.
குறைந்தபட்ச அடிப்படைக் காப்பீட்டுத் தொகை ரூ.3,00,000/-, அதிகபட்ச அடிப்படைக் காப்பீட்டுத் தொகைக்கு உச்சவரம்பு இல்லை, மேலும் ரூ.10,000/-ன் மடங்குகளாக இருக்க வேண்டும்.
பிரீமியம் செலுத்தும் காலம் 7,10,12,15 மற்றும் 18 வருடங்கள்.
குறைந்தபட்ச நுழைவு வயது 30 நாட்கள், அதிகபட்ச நுழைவு வயது 55 வருடங்கள். மேலும் பிரீமியம் செலுத்தும் காலத்தைப் பொறுத்து இது மாறுபடும்.
குறைந்தபட்ச முதிர்வு வயது 28 ஆண்டுகள் (முடிந்த வயது) மற்றும் அதிகபட்ச முதிர்வு வயது 78 ஆண்டுகள் (பிறந்த நாள் அண்மையில்)
எல்.ஐ.சி.பாலிசிதாரர்கள் மற்றும் நியமனதாரர்கள்/மரணமடைந்த பாலிசிதாரர்களின் பயனாளிகளுக்கு தள்ளுபடி உண்டு.
ரைடர் விருப்பத்தேர்வுகளின் மூலம் காப்பீடுப் பாதுகாப்பை அதிகரிக்கும் வசதி
எல்.ஐ.சி.யின் ஜீவன் ரக்க்ஷா :
இது ஒரு இலாபப் பங்களிப்பற்ற, பங்குச்சந்தை சாராத முழு இடர்க் காப்பீடுத் திட்டமாகும்.
குறைந்தபட்ச நுழைவு வயது 18 ஆண்டுகள். அதிகபட்ச நுழைவு வயது 45 ஆண்டுகள்(முடிந்த வயது)
குறைந்தபட்ச முதிர்வு வயது 33 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச முதிர்வு வயது 60 ஆண்டுகள் (பிறந்த நாள் அண்மையில்)
குறைந்தபட்ச அடிப்படைக் காப்பீட்டுத் தொகை ரூ.5,00,000/-. அதிகபட்ச அடிப்படைக் காப்பீட்டுத் தொகை ரூ.24 லட்சம்.
பிரீமியத்தை ஒற்றை, சீரான பிரீமியம் மற்றும் வரையறுக்கப்பட்ட பீரீமியம் ஆகிய தவணை முறைகளில் செலுத்தலாம்.
பெண்களுக்கு சிறப்பு பிரீமிய விகிதங்கள்.
உயர் காப்பீட்டுத்தொகைக்கு தள்ளுபடி வழங்கப்படும்.
ரைடர் விருப்பத்தேர்வுகளின் மூலம் காப்பீடுப் பாதுகாப்பை அதிகரிக்கும் வசதி
மேலும் விவரங்களுக்கு விற்பனை பதிவேட்டை பார்க்கவும் அல்லது www.licindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இந்த திட்டங்கள் 07, செப்டம்பர் 2026 முதல் கிடைக்கும்.
Dated at Mumbai on 1st September, 2026
மேலும் விவரங்களுக்கு: நிர்வாக இயக்குனர்(CC),எல்.ஐ.சி. ஆஃப் இந்தியா, மத்திய அலுவலகம், மும்பை. இ-மெயில் : ed cc@licindia.com பார்க்க: www.licindia.in