லைஃப்ஸ்டைல்

It's One Life - வாழ்க்கை வாழ்வதற்கே.. வாழக் கற்றுத் தரும் வீடுகள்!

By Sumalekha
15 Sep 2026, 06:45 PM
பிள்ளைகள் தூரத்தில் இருந்தாலும், ஓய்வு பெற்றோர் குடியிருப்பில் புதிய நட்புகளையும் உறவுகளையும் உருவாக்கிக்கொண்டால் தனிமையைத் தாண்டி மீண்டும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.
"அம்மா… சாப்பிட்டீங்களா?” – மகளின் குரலில் அக்கறையை விட கவலை அதிகமாக இருந்தது.

கணவர் இறந்த பின்பு, மகன் வெளிநாட்டில். இப்போது, மகளும் தன் கணவனின் வேலை நிமித்தமாக தூர தேசம் சென்றுவிட்டாள். வீட்டில் அம்மா மட்டும் தனிமையில்!

"நான் நல்லாத்தான் இருக்கேன்," என்றாள் அம்மா. ஆனால், அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருந்த வலியை மகள் உணர்ந்தாள்.

சில நாட்களுக்கு முன்புதான், ஓய்வு பெற்றோர் குடியிருப்பு ஒன்றில் சென்று செட்டிலாகியிருந்தாள் அம்மா. யாருடனும் இன்னும் பரிச்சயம் ஏற்படவில்லை.

அன்று காலை, கதவு தட்டப்பட்டது. கூடவே ஒரு குரல் ... "மாமி, விடிஞ்சிடுச்சே! நடைப்பயிற்சிக்கு வர்றீங்களா?"

அழைத்தது, பக்கத்து வீட்டில் வசிக்கும் மீனாட்சி அம்மாள்தான். தயக்கத்தோடு அந்த அம்மாளுடன் சென்று, மகளிர் குழுவுடன் கலந்து நடைபயின்றாள் அம்மா.

மறுநாள், தோட்டத்தில் பெரிய அண்டாவில் இஞ்சி மணக்கும் தேநீர் தயாராகி, ஒட்டுமொத்தப் பேருக்கும் விநியோகம் ஆனது.

அடுத்த வாரம், சமையல் போட்டி!

மெல்ல மெல்ல, அந்தப் புதிய இடத்தில் அம்மாவுக்கென ஒரு சிறிய உலகம் உருவானது.

ஒரு நாள் மாலை, மகள் அழைத்தாள். "அம்மா, இப்பவும் நீங்க தனியா ஃபீல் பண்றீங்களா?

"இல்லம்மா ... இங்கே எல்லாரும் என்னைத் தேடுறாங்க! நானும் எல்லாரையும் தேடுறேன்!"

மகளின் கண்களில் நீர் சுரந்தது. ஆனால், அது கவலையின் கண்ணீர் இல்லை.

பிள்ளைகள் தூரத்தில் இருந்தாலும், அன்பு நம் அருகிலேயே இருக்கும்.

சில வீடுகள் நம்மைத் தங்க வைப்பதோடு நின்றுவிடுவதில்லை; நமக்கு மீண்டும் வாழவும் கற்றுக்கொடுக்கின்றன.

- மாலா சங்கர்