சினிமா

"இன்னைக்கும் என்னைக்கும் ஒரு தலைவன் தான்".. ஜெயிலர் 2 SECOND SINGLE வெளியீடு!

By Christon
25 Sep 2026, 06:44 PM
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'ஜெயிலர் 2' படத்தின் 'ஒன் சன் ஒன் மூன்' என்ற இரண்டாவது பாடல் வெளியானது.
நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி திரையரங்குகளை அதிரவைத்த 'ஜெயிலர்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் தொடர்ச்சியாக, 'ஜெயிலர் 2' திரைப்படம் தயாராகி வருகிறது. ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நட்சத்திர பட்டாளம்

முதல் பாகத்தில் நடித்து அசத்திய ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன் ஆகியோரோடு, இந்த இரண்டாம் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன் மற்றும் மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். அனிருத்தின் துள்ளலான இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் அக்டோபர் 15 அன்று உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளது.

'ஒன் சன் ஒன் மூன்'

முன்னதாக வெளியான 'அல்ல போலேலொ' பாடல் யூடியூப்பில் 32 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று (செப்.25) படத்தின் இரண்டாவது பாடலான 'ஒன் சன் ஒன் மூன்' (One Sun One Moon) வெளியிடப்பட்டுள்ளது. வெஸ்டன் இசையமைப்பில், ஆங்கில வரிகள் தூக்கலாக அமைந்துள்ள இப்பாடலை ஹைசன்பர்க் மற்றும் சூப்பர் சுப்பு எழுதியுள்ளனர்.

இணையத்தைக் கலக்கும் வரிகள்

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் எம்.எஸ்.கிருஷ்ணா இணைந்து பாடியுள்ள இப்பாடலில் இடம்பெற்றுள்ள "இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்" என்ற வரிகள் ரஜினி ரசிகர்களைச் சிலிர்க்க வைத்துள்ளது. சோஷியல் மீடியாவில் இப்பாடல் வரிகள் தற்போதே காட்டுத்தீ போலப் பரவி ட்ரெண்டாகி வருகிறது.

Innaikkum Ennennaikkum, Oru Thalaivan Dhaan! ⭐ #OneSunOneMoon is out now!

▶️ https://t.co/Nx0jTJb38t@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @soupersubu @vijaykartikdop @Nirmalcuts… pic.twitter.com/dQb0bgdyrn
— Sun Pictures (@sunpictures) September 25, 2026