சினிமா

'சர்தார் 2' படத்தை ஓரங்கட்டிய சூரி.. BOX OFFICE-ல் கலக்கும் 'மண்டாடி'!

By Christon
18 Sep 2026, 06:05 PM
‘மண்டாடி’ திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வெளியான ‘மண்டாடி’ திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மண்டாடி' திரைப்படம் மீனவர்களின் வாழ்க்கை பின்னணியையும், அவர்களுக்கு இடையே நடைபெறும் விறுவிறுப்பான படகுப் போட்டியையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரட் குமார் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் சுவாரஸ்யமான திரைக்கதையுடன் இப்படம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால், திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படம் மூலம் நாயகனாக அறிமுகமான சூரி, தொடர்ந்து ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ என வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார். அந்த வரிசையில், சுமார் ரூ. 40 கோடி பட்ஜெட்டில் உருவான ‘மண்டாடி’ திரைப்படம் தற்போது ரூ. 80 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. வரும் நாட்களில் இதன் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூரியின் 'மண்டாடி' திரைப்படத்துடன் வெளியான 'சர்தார் 2' கலவையான விமர்சனத்தையுடம் எதிர்பார்த்த வசூலையும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கார்த்தியின் 'சர்தார்' முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகம் உருவானது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்த்த ஏமாற்றமே மிஞ்சியதாக குமுறுகின்றனர்.